ஒரே ஒரு மாவட்டத்தில் 3 இலக்கு கொரோனா பாதிப்பு… எந்தெந்த மாவட்டங்களில் எவ்வௌவு பாதிப்பு தெரியுமா..?

Author: kavin kumar
25 February 2022, 9:33 pm

சென்னை : தமிழகத்தில் இன்று புதிதாக 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனடிப்படையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. இருப்பினும் மார்ச் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு என்பது தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை கடற்கரையில் அனுமதி ,நர்சரி பள்ளிகள் ,மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அனுமதி ,பொருட்காட்சிகள் நடத்த அனுமதி ஆகிய பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப் போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பு ,பொருளாதாரம், மாணவ மாணவியரின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள திரும்புவதற்கு ஏதுவாக தமிழக அரசால் இதுபோன்ற தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. நேற்று 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,48,088,. ஆக உள்ளது.மேலும் இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளார். 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.

இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,997 ஆக உள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 133 பேருக்கும், கோவையில் 76 பேருக்கும், செங்கல்பட்டில் 58 பேருக்கும், திருப்பூரில் 15 பேருக்கும், சேலத்தில் 15 பேருக்கும், ஈரோட்டில் 22 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!