டெல்லிக்கு சென்று தமிழக மக்களுக்கு CM ஸ்டாலின் சொன்ன வாக்குறுதி ஞாபகம் இருக்கா? Remind செய்த ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2023, 5:59 pm

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று ஐ.கோர்ட்டு பரிந்துரை வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பா.ம.க. நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், 2021 தேர்தலில் அது குறித்த வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்று கூறி அரசு நழுவிக்கொள்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அத்தகைய வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்றாலும் கூட, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன்முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மதுவிலக்கை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது என்பது தான் அதன் பொருள். எனவே, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 377

    0

    0