அரசு கலைக் கல்லூரிகளில் சேரணுமா…? தேதியுடன் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2023, 1:28 pm

அரசு கலைக் கல்லூரிகளில் சேரணுமா…? தேதியுடன் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நேற்று வரை 77,984 மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் என்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15% மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் இருக்கக்கூடிய இடங்கள் போதுமானதாக இல்லை என்பதினால் அதிகரிக்கப்படுகிறது என்றார். மேலும், சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரிக்கலாம்.

திருச்சி பெரியார் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் ரத்து என்பது தவறான தகவல் என்றும் கூறினார். இதனிடையே, தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி திறக்கப்படும் என நேற்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 380

    0

    0