பாஜகவுக்கு இனி தாமரை சின்னம் கிடையாதா? உற்று பார்க்கும் தேர்தல் ஆணையம்.. உயர்நீதிமன்றம் போட்ட பரபர உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 1:49 pm

பாஜகவுக்கு இனி தாமரை சின்னம் கிடையாதா? உற்று பார்க்கும் தேர்தல் ஆணையம்.. உயர்நீதிமன்றம் போட்ட பரபர உத்தரவு!!

நாடாளுமன்ற தேர்தல், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், தற்போது 5 மாநில தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.

இந்த சூழலில் பாஜகவுக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்தும் விதமாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல் இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, எனது மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு வழங்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா என விளக்கம் அளிக்க வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விதிமீறல் நிரூபிக்கப்பட்டால் கடும் அபாரத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும். தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

  • தமிழை மதிக்காத புஷ்பா 2 ..சாதனையில் கலக்கும் ட்ரெய்லர்…!
  • Views: - 348

    0

    0