முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசையா? தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு காரசார பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2023, 9:58 pm

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகிளர்ஆணைய உறுப்பினர் குஷ்பு, எந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டிப்பாக குரல் கொடுப்பேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

பலமுறை பெண்களின் உரிமைக்காக பேசியுள்ளேன் அதனை அடிப்படையாகக் கொண்டு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக என்னை நியமித்து உள்ளனர் என் கட்சி சார்ந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ்நாடு காஷ்மீர் என மாநிலங்கள் வேறுபாடு இன்றி இந்தியா முழுவதும் எங்கு ஒரு பெண்ணுக்கு பிரச்சனை நடந்தாலும் கண்டிப்பாக குரல் கொடுப்பேன்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ஏற்கனவே ட்விட்டரில் பதிவு செய்துள்ளேன். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இன்று சென்னை விமான நிலையம் வந்த பொழுது மு க ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடலாம் என கருத்தினை தெரிவித்து இருந்தார்.

இது குறித்து கேட்ட பொழுது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் ஆகும் ஆசை இருந்தால் தாராளமாக வேட்பாளராக போட்டியிடலாம் இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு யார் வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடலாம் மக்கள் வாக்களித்தால் தாராளமாக அவர் பிரதமராகவும் ஆகலாம் என கூறினார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!