மக்களை துரத்தி சென்று கடித்து குதறும் தடை செய்யப்பட்ட நாய்கள்..! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புலம்பல்..!
Author: Vignesh5 November 2022, 8:26 pm
திண்டுக்கல்: பொதுமக்களை கடித்து குதறும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிட்புல் நாய் சாலையில் செல்லும் பொது மக்களை கடித்து குதறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு சண்முகபுரம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் விவசாய மற்றும் விவசாய கூலிப்பணிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே பகுதியில் கேரளவை சேர்ந்த நபர்கள் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிட் புல் என்ற நாயை வளர்த்து வருகின்றனர். அதே போல் நாயை இவர்கள் கட்டி வைக்காமல் அவிழ்த்து விடுவதால் விவசாய பணிகளுக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடித்து குதறுவதாகவும் கடந்த மாதம் கூட ஒருவரை கடித்ததில் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்ததாகவும், அதேபோல் தற்போது வரை பத்துக்கும் மேற்பட்ட நபர்களை இந்த நாய் கடித்ததாகவும், இப்பகுதி பெண்கள் கூறுகின்றனர்.
மேலும், காவல்துறை மற்றும் நகராட்சி உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறும்பொழுது நாங்கள் தினமும் பெரும்பள்ளத்திற்கு வேலைக்காக செல்கிறோம், சாலையில் செல்லும் பகுதியில் தான் கேரளாவை சேர்ந்த இவர்களின் வீடு உள்ளது.
இவர்கள் நாயை கட்டி வைக்காமல் அவிழ்த்து விடுவதால் சாலையில் செல்லும் நபர்களை கடித்து குதர்கிறது. ஆகவே தடை செய்யப்பட்ட நாயை உடனடியாக எங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் பொதுமக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் தனது வீட்டில் வளர்க்கும் நாய் அடுத்தவர்களை கடித்து குதறுவதை கண்டு கொள்ளாமல் இருக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் கடந்த ஆண்டு வில்பட்டி ஊராட்சி பகுதி அட்டவம்பட்டியில் வீடெடுத்த தங்கி இருந்த பொழுது அப்பகுதியில் பல்வேறு நபர்களை நாய் கடித்ததால் அட்டவன்பட்டி பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது சண்முகபுரத்தில் இவர்கள் தங்கி இருந்து பொதுமக்களை நாய் கடித்து வருகிறது. ஆனால் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களைப் பற்றி கவலைப்படாமல் நாய் வளர்ப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.
ஆகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு பொதுமக்களை கடிக்கும் நாயை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், நாய் வளர்ப்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கையாக இருக்கின்றன.