சென்னையில் மீண்டும் ஒரு சம்பவம்… சிறுமியை துரத்திய தெருநாய்கள்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!
Author: Babu Lakshmanan20 May 2024, 2:49 pm
திருவள்ளூர் அருகே மசூதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமியை 4 நாய்கள் துரத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் கௌதமபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் அமீத். பெரம்பூர் லோகோ பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். கடந்த 18 ஆம் மாலை அவரது மனைவி தய்யூப் பேகம், இரண்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் அனிஷாவும், மற்றொரு மகள் தனிஷா ஆகியோருடன் பெரம்பூர் நியூ காமராஜர் நகர் பகுதியில் உள்ள மசூதிக்கு சென்று விட்டு திரும்பும் போது, பெரம்பூர் கௌதமபுரம் ஹவுசிங் போர்டு பின்புறம் வந்துள்ளனர்.
மேலும் படிக்க: பாஜகவின் துணையோடு IAS, IPS அதிகாரிகளுக்கு மன உளைச்சல்… சந்திரபாபு நாயுடு மீது அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!!
அப்போது, அங்கிருந்த தெருநாய்கள் சிறுமி அனிஷாவை துரத்தியுள்ளன. அவருக்கு பின் சற்று தூரத்தில் மற்றொரு மகளுடன் அவரது தாய் வந்து கொண்டிருந்தார். நாய் துரத்தியதால் பயந்து போன அனிஷா ஓடிய போது நான்கு நாய்கள் சிறுமியை துரத்தி அதில் ஒரு நாய் சிறுமியை கடித்துள்ளது.
பின்னால் வந்த சிறுமியின் தாயார் கற்களை கொண்டு நாய்களை விரட்டியதால் சிறுமி சிறு காயங்களோடு தப்பியுள்ளார்.
காயமடைந்த சிறுமி அனிஷா பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிறுமி அனிஷாவை நாய்கள் துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.