அரசியல் கோமாளி குறித்து என்னிடம் கேள்வி கேட்காதீங்க : செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 10:53 am

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்புப் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் 80 அடி சாலையில் சாலை சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார். அதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக தொழில் முனைவோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது. கோவை காவல்துறை இவ்வழக்கை மிகத் திறமையாக கையாண்டுள்ளது.

கட்சி தலைமைக்கு தெரியாமல் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்லமுடியும்? கட்சித் தலைவர் என்ன செய்யவேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்யவேண்டும் என சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

  • Ajith Kumar Spain racing car பறக்குறோம் பறந்தே ஆகுறோம்…தெறிக்கவிடப்போகும் ரேஸ் கார்…களத்தில் கெத்தாக அஜித் ..!
  • Views: - 457

    0

    0