ஓட்டு கேட்டு வராதீங்க.. உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் : திமுகவினரை விரட்டிய பெண்.. வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2024, 5:54 pm

ஓட்டு கேட்டு வராதீங்க.. உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் : திமுகவினரை விரட்டிய பெண்.. வைரலாகும் வீடியோ!

மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அதனை தொடர்ந்து கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து கோவை மசக்காளிபாளையம் பகுதியில் திமுகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வாக்கு சேகரிக்க வாக்கு சேகரித்து வந்தனர்.

அப்போது கோவை மசக்காளிபாளையம் பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் திமுகவினர் வாக்கு சேகரிக்க சென்ற போது திமுக ஆட்சி வந்த பிறகு சொத்துவரி, மின்சார வரி, பால் விலை உயர்வு ஆகியவற்றை உயர்த்தி பொதுமக்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டதாக அந்த மூதாட்டி திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் திமுகவினர் வாக்கு சேகரிக்க சென்றபோது 33 மாதங்கள் ஆகியும் திமுக பொதுமக்களுக்கு எந்த விதமான தேர்தல் வாக்கு உறுதி நிறைவேற்றவில்லை.

பொதுமக்களுக்கு மேலும் சுமையை கொடுத்து வருவதால் பொதுமக்கள் மிகவும் திமுக மீது வெறுப்பில் உள்ளனர்.அதனால் பொதுமக்கள் ஆதங்கத்தை திமுகவினர் வாக்கு சேகரிக்க வரும்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!