8 பேர் கைது செய்துவிட்டோம் என ஆம்ஸ்டிராங் கொலையை இதோட மூடிறாதீங்க : திமுக அரசுக்கு திருமா வைத்த ட்விஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan6 July 2024, 12:58 pm
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக விரோத கும்பலால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாக கண்டிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது சரண் அடைந்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை. சரணடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்று இருந்துவிடாமல் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள், கொலை செய்ய தூண்டியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும். இல்லம் அருகே மாநில தலைவர் கொல்லப்பட்டது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய சவால்
பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைத்து அஞ்சலி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.