சும்மா சொல்லக் கூடாது நல்ல மனசு தாங்க தனுஷ்க்கு – என்ன பண்ணாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Author: Rajesh10 May 2022, 1:39 pm
நடிகர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளரர். தொடர்ந்து மொழி கடந்து, நாடு கடந்தும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படிபட்ட சூழ்நிலையிலும், நடித்து வரும் தனுஷ், நடிகர் பிரபுதேவாவுக்கு நன்றி கடன் செய்துள்ளார். அப்படி என்ன செய்தார் தெரியுமா?
அதாவது, தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தை விட அதில் வந்த ரௌடி பேபி பாடல் தற்போது வரை பிரபலம். பாடலின் நடன வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து பேய் ஹிட்டானது. அந்த சமயம், தன்னுடைய பிசி நேரத்திலும் பிரபுதேவா தனுசுக்காக அந்த ரௌடி பேபி பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்தார் .
நடிகர் பிரபு தேவா, நடிப்பதில் இருந்து கொஞ்சம் விலகி இயக்குனர் பிரபுதேவாவாக மாறினார். பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கவும் செய்துள்ளார். அதன் பின்னர் அது சரிபடாமல் தற்போது மீண்டும் நடிகராகி விட்டார். அவர் நடிப்பில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் குலேபகாவலி . இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்கி இருந்தார். தற்போது மீண்டும் அவர் இயக்கத்தில் மீண்டும் பிரபு தேவா நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு பாடலை பாடுவதற்கு தனுஷிடம் கேட்டுள்ளனர். அதற்கு தனுசும் சம்மதித்து பாடிக்கொடுத்துள்ளாராம்.
ரௌடி பேபி பாடலுக்கு நன்றி கடனாகவே இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.