அமலாக்கத்துறை கதவை தட்ட வேண்டாம்… திறந்தே வைக்கிறோம் : அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2024, 7:38 pm

அமலாக்கத்துறை கதவை தட்ட வேண்டாம்… திறந்தே வைக்கிறோம் : அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘விரைவில் அமலாக்கத்துறை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வீட்டு கதவை தட்டும்’ என்று கூறினார்.

காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு?. நாங்களே திறந்து வைத்திருக்கிறோம்.

பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார். அவர் என்ன வந்து பார்த்தாரா?. பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையை குழப்பி விடுவீர்கள். கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வரும் என கூறினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 571

    0

    0