பொது இடத்தில் எப்படி பேசணும்னு தெரியாதா? வாயால் சிக்கிக் கொண்ட சீமான் : கைது செய்ய தீவிரம்?

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2023, 10:55 am

வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட மாநிலத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 13 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

வட மாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதால், இந்திய தண்டனை சட்டம் 153(B)(c), 505(1)(c),506(1) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi OTT release announcement ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…