வாழத்தான் விடல.. எங்களை சாக விடுங்கள் : திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற தனியார் விடுதி உரிமையாளர்!!
Author: Udayachandran RadhaKrishnan16 செப்டம்பர் 2022, 7:47 மணி
திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாக கூறி தனியார் விடுதி உரிமையாளர் மனைவியுடன் நகராட்சி அலுவலகமும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திமுக நகரச்செயலாளர் வாள்சுடலையின் தம்பி கீழ வீர ராகவபுரம் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் டோல்கேட் அருகே விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் ராமகிருஷ்ணனின் விடுதிக்கு பாதாள சாக்கடைதிட்டத்தில் இணைப்பு வழங்க நகராட்சி 5-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாரகர் மற்றும் நகராட்சி நிர்வாகம் ரூ 5-லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறி விடுதி உரிமையாளர் ராமகிருஷ்ணன் தனது மனைவி சண்முகசுந்தரி உடன் நகராட்சி அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முன்றார்.
அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதயனைடுத்து நகராட்சி அலுவலம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் நகரராட்சி நிர்வாகம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் வேலவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனியார் விடுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட போது ராமகிருஷ்ணன்
விதிமுறைகளை மீறி விடுதியில் கழிவறைகளை கட்டி கழிப்றை கழிவுகளை சாலையில் திறந்தவெளியியில் விடுவது தெரியவந்ததையடுத்து விடுதியிலிருந்த கழிப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் முறையான அனுமதியின்றி விடுதி கட்டப்பட்டுள்ளதாக விடுதியிலிருந்து பாதாள சாக்கடை திட்டத்திற்கு செல்லும் கழிவு நீர் இணைப்புகளையும் நகராட்சி நிர்வாகம் துண்டிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விடுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க கேட்டு ராமகிருஷ்ணன் நகராட்சியில் பணம் கட்டியுள்ளார். ஆனால் அவரது விடுதி முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதால் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருதலாலும் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டித்ததாக நகராட்சி ஆணையர் வேலவன் தெரிவித்தார்.
*எங்களை சாக விடுங்கள்…!* *திருச்செந்தூர் திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற பரபரப்பு காட்சி லாட்ஜ் உரிமையாளரால் பரபரப்பு* ஐந்து லட்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் நீ எங்கு வேண்டுமானாலும் போயி சொல்லு 😤 @CMOTamilnadu pic.twitter.com/Nuzn41q3ZD
— Manimaran (@kmani2011) September 16, 2022
இந்த நிலையில் விடுதிக்கு பாதாளை சாக்கடை இணைப்பு வழங்க திமுக கவுன்சிலர் லஞ்சம் கேட்பதாக கூறி திமுக நகர செயலாளரின் தம்பி நகராட்சி அலுவலகமும் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0