கெழடு கட்டைகள வெச்சிட்டு எங்கள சீண்டிப் பார்க்காதீங்க.. திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க : திமுகவுக்கு ஹெச் ராஜா எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2023, 6:14 pm

கெழடு கட்டைகள வெச்சிட்டு எங்கள சீண்டிப் பார்க்காதீங்க.. திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க : திமுகவுக்கு ஹெச் ராஜா எச்சரிக்கை!

காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் H.ராஜா இவ்வாறு கூறினார். மேலும், பாஜகவை சீண்டும் அளவிற்கு திமுகவில் இளமையான ஆட்கள் இல்லை என்றும், அதனால், இளைஞர்களின் கட்சியான பாஜகவை முதல்வர் சீண்டி பார்க்க வேண்டாம் என்றும் கூறினார்.

சமரசம் ஆகி விட்டோம் என்ற செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தை எடுத்துக் கொண்டு, அவரது வழக்கை ஏற்கனவே தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளது என்றவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களை மீண்டும் ஏமாற்றத்தான் ” நீட் “நாடகத்தை திமுக கையில் எடுத்துள்ளதுதாகவும் தண்டனை, அபராதம், போன்ற தண்டனைகள் உண்டு என்ற H.ராஜா, அதனால் பொய் வழக்குகளை அமலாக்கத்துறையினர் போடமாட்டார்கள் என்றும் உறுதிபட கூறினார்.

முன்னதாக பேட்டியின் தொடக்கத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்பதற்கு பதிலாக, தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்று தவறாக கூறியது குறிப்பிடத்தக்கது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 332

    0

    0