கேரள குண்டுவெடிப்பு குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம்..மாநிலம் முழுவதும் உஷார்.. காவல்துறை வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2023, 3:11 pm

கேரள குண்டுவெடிப்பு குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம்..மாநிலம் முழுவதும் உஷார்.. காவல்துறை வேண்டுகோள்!!

களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பு பதிவுகளை பரப்ப வேண்டாம் என மாநில காவல்துறை தலைவர் ஷேக் தர்வேஷ் சாஹிப் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்ற பதிவுகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் டிஜிபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், களமசேரி குண்டுவெடிப்பை அடுத்து, மாநிலத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் ஜெபக்கூட்டம் டெக்னோபார்க்கில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

  • Nagarjuna akkineni Families Appreciates Sobhita Decision பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!