நாவடக்கம் தேவை… யோசிக்காம பேசாதீங்க : விருச்சிக ராசி உள்ளவர்களே… உங்களுக்கான குருபெயர்ச்சி பலன்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 7:09 pm

குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

சொல்லிலும் செயலிலும் ஒரே நேர்கோட்டை கடைபிடிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே! இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கை தரம் உயர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் கட்சிப்பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்
சஷ்டி கவசம், சண்முக கவசம் பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu