தேர்தல் முடிவுகள் பற்றி கவலையில்லை.. சனாதன கும்பலிடம் மக்களை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது : திருமாவளவன் கூக்குரல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 2:01 pm

தேர்தல் முடிவுகள் பற்றி கவலையில்லை.. சனாதன கும்பலிடம் மக்களை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது : திருமாவளவன் கூக்குரல்!

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழீழத்திற்கு என்று தனிமாநாடு நடத்தியதும், மரண தண்டனைக்கு எதிர்த்து மாநாடு நடத்திய இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருவதாகவும், சனாதன கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்துதுவாவிற்கு எதிர்பாக நடத்தப்பட்ட மாநாடு போன்று ஒரே நேர்கோட்டில் வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாகவும், ஐந்து மாநில தேர்தல் காங்கிரசா பாஜக அல்லது மோடியா, ராகுலா என்பதை மையமாக வைத்து நடந்த தேர்தல் இல்லை மாநிலத்திற்கு இடையேயான நடைபெற்ற பிரச்சனைக்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

மாநில வாரியான பிரச்சனைகளுக்கு மையப்படுத்தி நடந்த தேர்தல், இந்த தேர்தல் முடிவுகளை பற்றி கவலை பட வேண்டிய அவசியமில்லை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை வீழ்த்துகிற தேர்தலாக நடைபெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசிய அளவிலான கட்சியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கருத்தியல் ரீதியாக விசிக தேசிய அளவில் இருக்கிறது. நீட் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தான் நீட் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ