“குறை சொல்லுறவங்கள பத்தி கவலைபடாதீங்க.” Haters-க்கு பதிலடி கொடுத்த அஜித் !

Author: Rajesh
30 May 2022, 6:52 pm

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் தமிழ் சினிமாவில் அல்டிமேட்
ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். இவருக்கு நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார் பைக் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்.

இந்த நிலையில் இவரின் அடுத்த படமான அஜித் 61 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். மேலும் இவரின் சமீபத்திய படமான வலிமை படம் வசூல் ரீதியாக ஓரளவு தப்பித்தது என்று வியாபாரம் வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அஜித் அவர்களிடம் இருந்து ஓர் அறிக்கை வந்துள்ளது.

விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்து கொண்டேதான் இருப்பார்கள். குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். இதுக்கெல்லாம் காது கொடுத்தால் நாம் முன்னேற முடியாது வேலைய ஒழுங்கா பாருங்க..என்று கூறி இருக்கிறார். இந்த அறிக்கை தற்போது விஜய் ரசிகர்களுக்கு தான் தல அறிக்கை விட்டதாக கூறுகிறார்கள்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu