முகமெங்கும் இரட்டை இலை : எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு அதிமுக மாஸ்க் அணிந்து வந்த தொண்டர்கள்..!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 3:51 pm

கோவை : கோவையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் மேடை பிரச்சாரத்திற்கு வந்திருந்த பெருவாரியான அதிமுக தொண்டர்கள் இரட்டை இலைச்சின்னம் பொறித்த முகக்கவசங்களை அணிந்து வந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கோவையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கொடிசியா வளாகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக சுமார் 2 ஆயிரம் மக்கள் கொடிசியா வளாகத்தில் கூடியுள்ளனர். மேளதாளம் முழங்கி எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த பிரச்சார கூட்டத்திற்கு வந்திருக்கும் அதிமுக தொண்டர்கள் பலரும் இரட்டை இலை சின்னம் பொறித்த முகக்கவசம் அணிந்து கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலகட்டத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில், அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை சின்னம் பொறித்த மற்றும், அதிமுக முன்னோடிகளான அண்ணா, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்லவம் ஆகியோர் உருவம் பொறித்த முக்கவசங்களை அணிந்து வந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!