முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் இரட்டை கொலை… திடுக்கிட வைத்த கொலையாளின் பகீர் வாக்குமூலம்..!!

Author: Babu Lakshmanan
25 October 2022, 11:46 am

அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய வளையம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி மற்றும் மலர்விழி ஆகியோர் தைலமரக்காட்டில் காளான் பறிக்கச் சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில், இருவரும் கத்தியால் குத்தப்பட்டு, காட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கழுவந்தோண்டியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி முயல் வேட்டைக்கு பால்ராஜ் சென்றதாகவும், அப்போது, புதரின் நடுவில் காளான் பறித்துக் கொண்டிருந்த மலர்விழியை முயல் என நினைத்து சுளிக்கி ஆயுதம் மூலம் பால்ராஜ் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் அங்கேயே உயிரிழந்தார்.

பால்ராஜ் கத்தியால் மலர்விழியை குத்தியதைப் பார்த்த கண்ணகி சத்தம் போட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பால்ராஜ், கத்தியால் கண்ணகியையும் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முயல் என நினைத்து பெண் கொலை செய்யப்பட்டதை மறைக்க மற்றுமொரு கொலையை அரங்கேற்றியது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 611

    0

    0