கோயில் திருவிழாவில் இரட்டைக் கொலை… சகோதரர்களை வெட்டிச் சாய்த்த கும்பல்..!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2024, 10:26 am
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன்நகரில் நேற்று நடைபெற்ற சுடலை சுவாமி கோயிலில் கொடை விழாவில் முன்விரோதம் காரணமாக இரு குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் மதி ராஜா (35) மதியழகன் (40) ஆகியோர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர் . இவர்கள் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவார்கள்.
மேலும் மகேஸ்வரன்(41) ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர்கள் அனைவருமே உடன் பிறந்த சகோதரர்கள் ஆவார்.
இது சம்பந்தமாக திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து பருன்(27)ராஜ்குமார்(28), விபின்(27) ஆகியோரை தேடி வருகின்றனர். இரு குடும்பத்தினர் இடையே முன்பகை காரணமாக சம்பவம் ஏற்பட்டதாக தெரிகிறது.