முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பியை கொலை செய்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஆர்ப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் அவரது மகன் மதன் (22), மற்றொரு மகன் ஸ்ரீதர்ராஜா (20) ஆகியோரை அதே ஊரை சேர்ந்த ருக்குன் பாட்ஷா, அவரது மகன்கள் மன்சூரலிகான், மர்ஜித் அலிகான் மற்றும் உறவினர் ராஜ் முகமது ஆகிய நால்வரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக, கடந்த 12.5.2013 அன்று படுகொலை செய்தனர். இது தொடர்பாக கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேற்கண்ட நால்வரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், அமர்வு நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். அதன்படி, ருக்குன்பாட்ஷா, அவரது மகன் மர்ஜித் அலிகானுக்கு ஆயுள் தண்டனையும், மற்றொரு மகனான மன்சூர் அலிகானுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், உறவினர் ராஜ் முகம்மதுவுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இந்த நான்கு நபர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்
தண்டனை வழங்கப்பட்ட நால்வரும் உடனடியாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த நான்கு பேரின் உறவினர்களும் அதேபோன்று கொலை செய்யப்பட்ட இரண்டு நபர்களின் உறவினர்களும் நீதிமன்ற வாசலில் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது. இன்று தீர்ப்பு வழங்கும் நிலையில் காவல்துறையினர் ஏராளமானோர் நீதிமன்ற வாசலில் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.