2 ஏக்கர் நிலத்துக்காக இரட்டைக் கொலை : தாய் மற்றும் சித்தியை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan10 June 2022, 7:12 pm
வேலூர் : தாய் மற்றும் சகோதரியை கொலை செய்த கூலித்தொழிலாளி முனிராஜூவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பூசாரி வலசை கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிராஜ் (வயது 50). இவரது தாய் இந்திராணி (வயது 70) மற்றும் சகோதரி சின்னம்மா (வயது 42). இவர்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்த முனிராஜ் கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் இந்திராணி மற்றும் சகோதரி சின்னம்மாவை உருட்டு கட்டையால் தாக்கியதுடன் கட்டுகல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இதனை தடுக்க சென்ற தம்பி தினேஷையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்த வழக்கு பரதராமி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வழக்கு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டணையும் தம்பியையும் தாக்கி படுகாயமடைய செய்ததற்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதன் அடிப்படையில் முனிராஜ் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.