தாய், மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஆறுமுகம் மகன் பழனியப்பன் (வயது 54). கட்டிட பொறியாளரான இவருக்கு கரூரில் ஆசிரியராக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் வேந்தன்பட்டியில் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்துவந்த தாயார் சிகப்பிக்கு (வயது 75) இரவு உணவு வழங்க அங்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.
காலை கட்டிடப்பணிக்காக சென்ற தொழிலாளர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்குவந்த போலீசார் கதவு பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தாயும்,மகனும் இறந்தநிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை சேகரித்தபின் கதவை உடைத்து சென்று பார்த்தபோது தலையில் பலமாக தாக்கப்பட்டு பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சென்று கொலைச்சம்பவத்தை பார்வையிட்டு பழனியப்பன் குடியிருந்த வீட்டினையும் பார்வையிட்டார்.
அப்போது பழனியப்பன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, கேமரா காட்சி சேகரிப்பு பாகங்களும் கொலையாளிகளால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
மேலும் அந்த வீட்டிற்குள் இருந்த பிரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததுள்ளது. நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல் காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் கட்டிடத்தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பழனியப்பன் வைத்திருந்த பணத்தையும் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க இக்கொலைச்சம்பவம் நடைபெற்றுளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
…இணையத்தில் வைரலான ஆபாச டிஜிட்டர் விளம்பர பலகையை நீக்கம் செய்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.