திருச்சி முசிறியில் இரட்டைக் கொலை- ஒரே நேரத்தில் ஆண் மற்றும் பெண்ணை கொலை செய்து போலீசில் சரணடைந்தார்.
முசிறி அந்தரப்பட்டி குடோன் அருகில் வளையல் வியாபாரம் செய்து வசித்து வரும் முருகேசன் மனைவி கீதா (46 ) இவர் தன் கணவனைப் பிரிந்து இருந்து இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், முசிறி அருகே வாளவந்தியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (64) என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். இந்நிலையில், கீதா பாலச்சந்திரனிடம் கேஸ் சிலிண்டர் புதிதாக பதிவு செய்வதற்கு பணம் கேட்டுள்ளார்.
பாலச்சந்திரன் குறைவான பணம் கொடுத்ததால் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று பாலச்சந்திரனை கீதா கண்டித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன் இன்று காலை ஆறு மணி அளவில் கீதா வீட்டிற்கு சென்று கீதாவை அறிவாளால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதோடு, நின்றுவிடாமல் தனது சொந்த ஊரான வாளவந்தியில் தனது வீட்டு அருகில் உள்ளவரிடம் நிலத்தகராறு இருந்து வந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் 55 என்பவரை ஜம்புநாதபுரம் காவல் நிலையம் அருகில் உள்ள டீ கடையில் வைத்து தலையில் வெட்டி உள்ளார். ரத்த வெள்ளத்தில், கீழே சாய்ந்த ரமேஷை மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்து விட்டார்.
இரட்டை கொலை செய்துவிட்டு பாலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில், அரிவாளுடன் சரணடைந்து விட்டார். இச்சம்பவம் முசிறி பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. கடந்த 2003-ஆண்டு இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று கடந்த 2018 ஆம் ஆம் ஆண்டு தான் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இறந்து போன ரமேஷ் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் பாலச்சந்திரன் மீது அளித்துள்ளார். காவல்துறையின் அலட்சியத்தால் தான் இந்த கொலை நடந்துள்ளதாக வாழவந்தி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.