திருமணமாகி ஒரே மாதத்தில் வரதட்சணை கொடுமை.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் : நீதி கேட்டு காவல்நிலையம் முற்றுகை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 9:43 pm

கரூர் : திருமணமாகி ஒரு மாதம் கூட இல்லை, அதற்குள் பெண் சித்திரவதை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கரூர் காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு நீதி கேட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

சேலம், அஸ்தம்பட்டி பகுதியினை சார்ந்தவர், பிரேம், இவரது சகோதரியினை கடந்த ஜூன் 3 ம் தேதி அன்று கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியினை சார்ந்தவர் மாணிக்கம் மகன் விக்னேஷ் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், திருமணமான நாளிலிருந்தே, தினம் தோறும் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சகோதரர் பிரேம், சகோதரி பிரபாவதி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க, உடனே, க.பரமத்தியில் புதிதாக முதல்வர் கையால் திறந்து வைக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்த போது அங்கு கம்யூட்டர் இல்லை, பேப்பரும் இல்லை, ஒரே ஒரு டேபிளும், ஒரே ஒரு சேரும், பெண் போலீஸ் ஒருவரும் தான் உள்ள நிலையில், இன்று காலை கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மீண்டும் அளிக்கப்பட்டதையடுத்து , வரதட்சனை கொடுமை செய்த குடும்பத்தினை அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் விசாரணை செய்தும் அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் முன்பு திடீரென்று அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொறுப்பேற்ற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களால், காணொளியில் திறக்கப்பட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரே ஒரு டேபிளும், ஒரே ஒரு சேரும், ஒரே ஒரு பெண் போலீஸ் மட்டுமே உள்ள நிலையில் எழுதுவதற்கு கூட எந்த ஒரு உபகரணங்களும் இல்லாத நிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துறை உள்ளது கவலைக்குள்ளான விஷயம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 906

    1

    0