பாலாற்றில் கலக்கும் வணிக நிறுவனக் கழிவுகள் : மாற்று நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் வேதனை..!!
Author: Babu Lakshmanan20 August 2022, 9:49 am
காஞ்சிபுரம் : வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதால் விவசாயிகள் வேதனை வேதனையடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இங்கு உணவகங்கள், வணிக நிறுவனங்கள் அதிக அளவு உள்ளது. இந்த பேரூராட்சி அருகே பாலாறு செல்கிறது. பேரூராட்சி நிர்வாகம் பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை பாலாற்றில் நேரடியாக கலப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சுத்திகரிப்பு செய்து பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், பாலாற்றில் நேரடியாக கலக்கப்படும் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசு அடைவதாகவும் அப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே பேரூராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை மாற்று பாதையில் கொண்டு செல்ல பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.