விருதுநகர் : சாத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில வருடங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிக்களுக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 30 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழி தோண்டும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த 6பேர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தீடீரென்று குழி தோண்டும் போது மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. அப்போது, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் சக்திவேல் (40) கிருஷ்ண மூர்த்தி (50) இருவரும் மீதும் மண் சரிந்து விழுந்ததில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புதுறை வீரர்கள் மற்றும் சாத்தூர் நகர் போலீசார் மண்ணில் சிக்கி இருந்த இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாதாள சாக்கடை திட்ட பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படாத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.