கோவை பாஜகவில் அதிரடி மாற்றம்… தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாலாஜி உத்தமராமசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 8:01 pm

கோவை பாஜகவில் அதிரடி மாற்றம்… தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாலாஜி உத்தம ராமசாமி!!

பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோயம்புத்தூர் நகர் மாவட்ட தலைவராக பணியாற்றி வந்த திரு.பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள் மாவட்டத்தினை சிறப்பான முறையில் வழிநடத்தி களப்பணியாற்றி வந்தார். தற்பொழுது சொந்த காரணங்களுக்காக பாஜகவின் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளார்..

அவருடைய கடிதத்தினை ஏற்றுக்கொண்டு இன்று முதல் மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். கோயம்புத்தூர் நகர் மாவட்ட பொது செயலாளராக பணியாற்றி வந்த திரு.J.ரமேஷ்குமார் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!