சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்.. களமிறங்கும் முக்கிய வீரர்கள் : ருதுராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!
Author: Udayachandran RadhaKrishnan3 April 2025, 6:27 pm
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப்பில் பஞ்சாப் அணி உள்ளது. அதே சமயம் டெல்லி அணி போட்டியிட்ட 2 போட்டிகளிலும் வென்று பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை சாம்பியன் அணிகளான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆடி வருகிறது. குறிப்பாக சென்னை அணி ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோல்வியை சந்தித்தது பேசு பொருளானது.
இதையும் படியுங்க: கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?
சிஎஸ்கே வீரர்கள் முந்தைய தொடரில் இருந்ததது போல நல்ல பார்மில் இல்லை என பரவலான கருத்துக்கள் எழுந்தது. ருதுராஜ் ஒன் டவுன் இறங்குவது குறித்து பலரும் விமர்சித்தனர்.

அதே சமயம் ரச்சின் ரவிந்திரா ஆட்டதும், திரிபாதி ஆட்டத்தையும் மோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றன. நியூசிலாந்து வீரர் கான்வே என்ன ஆனார், ருதுராஜ் ஏன் ஓப்பனிங் இறங்க கூடாது என சரமாரியாக சிஎஸ்கே மீது விழுந்தது.
இதனால் சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. கான்வே நாளை மறுநாள் சென்னையில் நடக்கும் போட்டியில் பங்கேற்கிறார் என்றும், ருதுராஜ் முதல் பேட்டிங்கிலும், ரச்சின் 3வது பேட்டிங்கிலும் இறங்குவார் என கூறப்படுகிறது.
தடுமாறி வரும் சென்னை அணிக்கு இன்னொரு இளம் வீரரும் களமிறங்க உள்ளதாக கிரிக்கெட் வல்லுநர் கிருத்திகா கூறியுள்ளார்.
வரப்போகும் போட்டியில், இளம் வீரர் வன்ஷ் பேடியை களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், அதிரடி ஆட்டக்காரரான அவர், ஒரு ஓவருக்கு 20,30 ரன் அடிப்பார் என்று சொல்லாவிட்டாலும், ஒரு ஓவருக்கு 10 ரன்களை எடுப்பவர்.
நிச்சயம் சிஎஸ்கே அணி வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு கொடுக்கும் என நம்புகிறோம் என கூறியுள்ளார். கான்வே உள்ளே வந்தால், சாம் கரண் அல்லது ஜிம்மி ஓவர் டன் வெளியில் போக வேண்டிய சூழல் ஏற்படும்.
இதனால் பந்துவீச்சாளராக இந்திய வீரரை சிஎஸ்கே களமிறக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ, நிச்சயம் அதிரடி மாற்றத்தை ருதுராஜ் ஏற்படுத்த போகிறார்.