நடிகை கௌதமி அளித்த மோசடி புகாரில் அதிரடி திருப்பம்.. பாஜக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டாஸ்!!!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2024, 2:42 pm
நடிகை கௌதமி அளித்த மோசடி புகாரில் அதிரடி திருப்பம்.. பாஜக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டாஸ்!!!
பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி திடீரென பாஜகவில் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்ததோடு, இது தொடர்பாக, பாஜக தலைமைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தன்னை 20 வருடத்திற்க்கு முன்னர் நான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க என்னை தொடர்பு கொண்டார். நான் தாய் தந்தை ஆதரவு இல்லாதவள். ஒரு குழந்தையுடன் இருந்தேன். அதனால் அழகப்பனை நம்பினேன்.
ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன். எனக்கு தமிழக முதல்வர் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.
மேலும் நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அழகப்பன் ரூ9.9 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அழகப்பன் கைது செய்யப்பட்டார். மேலும் நடிகை கவுதமியின் சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பலராமனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அழகப்பன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.