நடிகை கௌதமி வழக்கில் அதிரடி திருப்பம்… கேரளாவில் பதுங்கிய அழகப்பன் குடும்பத்தினரை சாதுர்யமாக TRACE செய்த போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2023, 4:53 pm

நடிகை கௌதமி வழக்கில் அதிரடி திருப்பம்… கேரளாவில் பதுங்கிய அழகப்பன் குடும்பத்தினரை சாதுர்யமாக TRACE செய்த போலீஸ்!

நடிகை கௌதமி தான் சம்பாதித்த சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நம்பிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்து கொடுக்குமாறு அழகப்பன் என்பவரிடம் கொடுத்தபோது அதனை ஏமாற்றி அபகரித்து விட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளரிடம் முதல் புகாரை நடிகை கௌதமி கொடுத்துள்ளார். அடுத்தடுத்து தன் சொத்துக்கள் இருக்கும் இடம் தொடர்பான பகுதியில் புகார்களை கொடுக்க ஆரம்பித்துள்ள அந்த வகையில் சென்னையிலும் நடிகை கௌதமி புகார் அளித்துள்ளார்.

இவ்வாறாக சென்னை திருவண்ணாமலை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொடுக்கப்பட்ட புகார்களின் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்நிலையில் அழகப்பனுக்கு பலமுறை சம்மன் அளிக்கப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படை அமைத்து சோதனை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அழகப்பன் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நடிகை கௌதமி அளித்த புகாரி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட காரணத்தினால் கைதாகி விடுவோமோ என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் தலைமறைவாக முடிவு செய்துள்ளார்.

அழகப்பனின் மனைவி மிகவும் பக்தி மிகுந்தவர் என்ற காரணத்தினால் கடவுள் தொடர்பான வேண்டுதல் ஒன்று மிச்சம் இருப்பதால் தான் இது போன்று கெடுதல் நமக்கு நடைபெறுகிறது என கூறி வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு கேரளாவில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் சென்று பரிகாரம் செய்வதற்காக செல்லலாம் என தெரிவித்துள்ளார்.

வேண்டுதலை நிறைவேற்ற சென்று பிரச்சனை முடியும் வரை தலைமறைவாக இருக்கலாம் என கேரளாவில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை கௌதமி திடீரென பாஜகவில் இருந்து விலகுவதாகவும் தனக்கு பாதிப்பு ஏற்பட்டபோது பாஜக தரப்பிலிருந்து குரல் கொடுக்கவில்லை எனக் கூறி விலகுவதாகவும் கூறப்பட்ட செய்தி வெளியானது.

இதனால் காவல்துறை விரைந்து அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய திட்டமிட்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் தங்கியிருந்த நண்பர் வீட்டில் இருப்பவர்களுக்கு உண்மை தெரிய வந்த காரணத்தினால் தேடப்படும் நபர்களான அழகப்பன் மற்றும் குடும்பத்தினரை வெளியேற்றியுள்ளனர். இதனை எடுத்து மற்றொரு நண்பர் வீட்டில் கேரளாவில் அழகப்பன் தன் குடும்பத்தோடு தலைமறைவாகி. இருந்துள்ளார்.

இந்நிலையில் குடும்பத்தோடு தலைமறைவாக இருக்கும் அழகப்பன் மற்றும் குடும்பத்தினரை போலீசார் பல்வேறு விதமாக தேடிய போதும் பிடிப்பது சவாலாகவே இருந்தது. இருப்பினும் அழகப்பன் அவரது வழக்கறிஞரை அடிக்கடி தொடர்பு கொண்டது தொடர்பான தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

ஆனால் எங்கு பதுங்கி இருந்து தொடர்பு கொள்கிறார்கள் என போலீசார் தேடி வந்த நிலையில், விசாரணை செய்ததில் அழகப்பன் தான் பதுங்கி இருந்த வீட்டின் கீழ்புறம் செயல்படும் அழகு நிலையத்தின் இன்டர்நெட் wifi பயன்படுத்தி மட்டும் தனது வழக்கறிஞரிடம் பேசி வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இருப்பினும் கேரளாவில் எந்த இடத்தில் குறிப்பிட்டு பதுங்கி உள்ளார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்தபோது, தாங்கள் வழக்கறிஞரை தொடர்பு கொள்வதன் மூலம் செல்போன் நெட்வொர்க் வைத்து போலீசார் கண்டுபிடி விடக் கூடாது என்பதற்காக பயன்படுத்திய செல்போனை கொரியர் மூலமாக சென்னையில் ஒருவர் வீட்டிற்கு பார்சலில் அனுப்பி வைத்துள்ளனர்.

குறிப்பாக அந்த செல்போன் பயணிக்கும் இடங்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடிய போது கோடம்பாக்கம் ,அசோக் பில்லர் பகுதிகளில் இருந்தது தொடர்பான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

இந்த நிலையில் அந்த செல்போன் மூலமாக அழகப்பனின் மகன் நண்பர் ஒருவருக்கு அழைப்பு விடுத்தது சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டுபிடித்தனர். இதன் மூலம் கேரளாவில் அவர்கள் இருக்கும் பகுதியை கண்டறிந்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான் விக்டர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் என 20 பேர் கொண்ட குழு தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. மேலும் கேரளாவில் உள்ள காவல்துறை உள்ளிட்ட அவர்கள் 15 பேர் என சேர்ந்து 35 பேர் தீவிரமாக தேடினர்.

ஏற்கனவே அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த நண்பர் ஒருவர் வீட்டில் விசாரித்த போது 15 நாட்களுக்கு முன்பாகவே வீட்டிலிருந்து வெளியேறி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கேரளாவில் அழகப்பனுக்கு தொடர்புடைய நபர்கள் யாரேனும் உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு தேர்தலில் போலீசார் ஈடுபட்டனர்

சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சூரில் சென்று ஒரு இடத்தில் விசாரணை செய்ய செல்லும்போது காவல்துறையே எதிர்பார்க்காத வகையில் அழகப்பன் மற்றும் மொத்த குடும்பத்தினரும் அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதர எடுத்து அழகப்பன் அவரது மனைவி மகன் மகள் உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 20 வருடமாக நடிகை கௌதமி பழகி வந்ததாகவும் தங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் அழகப்பன் தெரிவித்துள்ளார். மகள் போலவே நடிகை கௌதமி தன்னோடு பழகியதாகவும் அழகப்பன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருப்பினும் திடீர் பணத்தாசையின் அடிப்படையிலேயே அழகப்பன் சொத்துக்களை அபகரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விசாரணை முடிந்த பிறகு அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் என கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர் படுத்தினர்.

அவர்களுக்கு வரும் ஜனவரி ஐந்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் அழகப்பன் மற்றும் அவரது மனைவி மகன் மகள் ஓட்டுநர் ஆகிய ஐவரையும் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 493

    0

    0