போலீஸ் விசாரணையில் அதிரடி திருப்பம்.. பயந்து போய் காரை திருடி சென்ற இளைஞர்கள் எடுத்த முடிவு..!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2025, 4:09 pm

கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி கோவைக்கு வந்து உள்ளார். கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று மது அருந்தியதாக தெரிகிறது.

அதை தொடர்ந்து அபிஷேக தனது காருக்கு பதிலாக அங்கு நின்றுகொண்டு இருந்த வேறு காரை எடுத்து சென்று உள்ளார். கார் குனியமுத்தூர் வரும் போது பெட்ரோல் நிரப்புவதற்கு அங்கு உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தும் போது தான் வாகனத்தை மாற்றி எடுத்துவந்தது தெரியவந்து உள்ளது.

இதையும் படியுங்க: நாதக சிக்கவில்லையா? சீமானுக்கு விஜய் வைக்கும் அரசியல் பொறி!!

அதை தொடர்ந்து வாகன எண்ணை வைத்து காரின் உரிமையாளரிடம் கார் ஒப்படைக்கப்பட்டதுடன். அபிஷேக்கை போலீசார் விசாரித்து அவரது வீட்டிற்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

அதைதொடர்ந்து அபிஷேகின் தந்தை காவல் நிலையம் வந்து அபிஷேக்கை மீட்டு உள்ளார். இந்த நிலையில் அபிஷேக் நிறுத்திய கார் மர்ம நபர்கள் கடத்தி சென்று உள்ளது தெரியவப்ததை அடுத்து ராமநாதபுரம் போலிசார் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அராபஸ், மற்றும் போத்தனூர் பகுதியை சேர்ந்த இஷான் அகமது ஆகியோர் காருடன் வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்து உள்ளனர்.

Youth Stole the car and surrender to police

மேலும் காரை திருடி சென்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் நீதிமன்ற ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…