மறுபடியும் முதல்ல இருந்தா? வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் : ஒரு டிஎன்ஏ கூட ஒத்துப்போகாதததால் அதிருப்தி!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 12:32 pm

மறுபடியும் முதல்ல இருந்தா? வேங்கைவயல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் : ஒரு டிஎன்ஏ கூட ஒத்துப்போகாதததால் அதிருப்தி!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் திறக்க தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் 189 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்

மேலும் இந்த நபர்களில் 39 நபர்களை சந்தேகப்பட்டு அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை நீதிமன்ற அனுமதி பெற்று புதுகோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.

சோதனை முடிவுகளுக்காக பகுப்பாய்வு மையத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சி பி சி ஐ டி போலீசார் அனுப்பினர். இதற்கிடையில் கடந்த ஒரு வருடமாக இந்த வழக்கு தொடர்பாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லாததால் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசின் சிபிசிஐடி போலீசாரையும் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்ட 31 நபர்களில் 10 நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் 31 நபர்களிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் முத்திரையிடப்பட்டு சிபிசி போலீசார் மற்றும் நீதிமன்றத்திற்கு பகுப்பாய்வு மையம் அனுப்பியுள்ளது

இதில் சம்பவத்தன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த நீரையும் மாதிரி எடுத்து சோதனை செய்யப்பட்டது இந்த சோதனை மாதிரி முடிவுகளும் 31 நபர்களிடம் எடுக்கப்பட்ட டி என் ஏ ரத்த மாதிரி பரிசோதனை முடிவும் ஒத்துப் போகவில்லை என்ற தகவல் வெளியாகிறது இதனை சிபிசிஐடி எஸ் பி தில்லை நடராஜன உறுதி செய்தார்.

ரத்த மாதிரி பரிசோதனை ஒத்துப் போகாமல் முடிவுகள் வந்துள்ளது சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கில் திடீர் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விசாரணையை மீண்டும் மறுபடியும் முதலில் இருந்து சி பி சி ஐ டி போலீசார் விசாரணை செய்யும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 399

    0

    0