தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த தி.க. பிரமுகர்… வைரலாகும் வீடியோ ; போலீஸில் புகார்..!!

Author: Babu Lakshmanan
3 October 2023, 4:36 pm

கோவை அருகே நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தேசிய கீதம் ஒலிக்கும் போது, எழுந்து நிற்காமல் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர் அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் ஊராட்சி ஒன்றியம் பீடம் பள்ளி ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவைச் சேர்ந்த குமாரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டத்தில் தி.க.வைச் சேர்ந்த நீ.க. பழனிச்சாமி என்பவரும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் ஒலிக்கப்பட்டது. அனைவரும் எழுந்தி நின்று மரியாதை செலுத்திய நிலையில், தி.க.வைச் சேர்ந்த பழனிச்சாமி மட்டும், எழுந்திரிக்காமல் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். பின்னர், பாடல் பாடி முடித்ததும், தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க மாட்டீர்களா..? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், தேசிய கீதத்தை அவமதித்ததாக பழனிச்சாமியின் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

https://player.vimeo.com/video/870622228?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இதனிடையே, இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் குமாரவேலுவிடம் கேட்டபோது, ‘குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்திற்கு முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்ததால், அந்த உத்தரவுப்படி சரியாக 12:30 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, கிராம சபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. தேவை எனில் தேசிய கீதம் ஒலித்த பின்னர் கூட கேள்விகளை கேட்டு இருக்கலாம். ஆனால், தேசிய கீதம் ஒலித்தபோது பழனிச்சாமி என்பவர் எழுந்திருக்கவில்லை’, எனக் கூறினார்.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்