NEET, CUET தேர்வுகளை MUTE செய்ய நாங்க வந்திருக்கிறோம்… தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இடமில்லை ; அடித்து சொல்லும் கி.வீரமணி..!!

Author: Babu Lakshmanan
1 November 2023, 12:51 pm

NEET தேர்வு மற்றும் CUET தேர்வுகளை MUTE செய்வதற்கு தான் நாங்கள் வந்துள்ளோம் என்றுதிராவிடர் கழக தலைவர் கி.விரமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பாக குலத் தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனாவா என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:- பாஜக கட்சி ஒரு மறைமுக கட்சி. அவர்கள் கட்சியே ஒரு இரட்டை நாக்கு கட்சி. வெளிப்படையாக ஒன்று கூறுவதும், உள்ளார்ந்த விஷயத்தில் ஒன்றும் ஆக இருக்கும். ஜாதி தொழில் தான் செய்ய வேண்டும் என்றால், ஆடு மேய்த்தவர் ஐபிஎஸ் ஆகி இருக்க முடியுமா..? சரஸ்வதி கடாட்சம் இல்லை, திராவிட இயக்கம் தான் காரணம்.

இந்த ஆட்சியில் ரூ.1200 கோடி செலவில் காலை சிற்றுண்டி தரப்படுகிறது. முந்தைய ஆட்சிகளில் கோயில்களில் புளியோதரையும் தயிர் சாதம் தான் தரப்பட்டது. இப்பொழுதுதான் பிள்ளைகள் காலை சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள். முன்பு சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே டாக்டர் என்ன இருந்தது. அது ஒழிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது நீட் தேர்வினால் ஒடுக்கப்பட்டவர்கள் யாரும் மருத்துவராக முடியவில்லை.

பூஜ்ஜியம் மார்க் பெற்றவர்கள் நீட்டில் பாஸ் ஆகி மருத்துவர் ஆகிறார்கள். புதிய கல்விக் கொள்கையினால் 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு தேர்வுகள் வைக்கப்படுகிறது. இவ்வளவு தேர்வு எழுதிய மீண்டும் க்யூட் தேர்வில் பாஸ் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நீட் மற்றும் கியூட்டை மியூட் செய்வதற்கு நாங்கள் வருகிறோம்.

சந்திராயன் ஆராய்ச்சியில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் குல தொழில் கல்வி திட்டம் ஒழித்த பின் விஞ்ஞானி ஆகியவர்கள். தாய் வீட்டு சீதனம் போல, மாத மாதம் ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது. பெண்களுக்கு அது உதவித்தொகை இல்லை, உரிமை தொகையாக வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா யோஜனா திட்டம் ஒரு குலக்கல்வி திட்டம். பெண்கள் கையில் பானை கொடுக்கப்பட்டுள்ளது. இது குலத் தொழிலை மீண்டும் ஊக்குவிக்கும் இந்த திட்டம்,கைகளால் செய்யப்பட்ட பொருள்களுக்கும், குடும்ப தொழிலுக்கும் வழங்கப்படுகிறது.

இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை கவர்னர் கையெழுத்திடாமல் நிராகரித்து அனுப்பி உள்ளார். ஆளுநருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடாமல் சட்டரீதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். குல தருமம், சனாதான தர்மம் எவ்வளவு பிற்போக்குத்தனமாக கொண்டு போக முடியுமோ, மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கு 365 நாட்கள் பத்தாது, தென் மாநிலங்களில் பிஜேபிக்கு இடமில்லை என்று முடிவெடுத்துள்ளார்கள்.

தெலுங்கானாவில் கூட போட்டி பிஜேபிக்கும், காங்கிரஸ்க்கும் அல்ல. மாநில கட்சிக்கும், காங்கிரஸ்க்கும் தான். ஐந்து மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிஜேபிக்கு இல்லை என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அனைவரும் ஒன்று சேர்ந்ததால் இந்தியாவை நாம் காப்பாற்றுகிறோம். அவர்கள் இந்தியா என்று கூறுவதற்கே பயப்படுகிறார்கள். இந்தியா என்கிற பெயர் அனைவரையும் இணைக்கிறது. இந்தியா கூட்டணி இன்னும் ஆறு மாத காலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

மோடி திரிசூலத்தை கையில் வைத்துள்ளார். ஒன்று வருமானவரித்துறை, மற்றொன்று சிபிஐ, மூன்றாவது அமலாக்கத்துறை. இது அனைத்தும் மக்கள் முன்பு எடுபடாது. உங்களிடம் அதானி, அம்பானி உள்ளார்கள். மக்கள் எங்களோடு உள்ளார்கள், என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தை மற்றும் தோழமை கட்சிகள் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 305

    0

    1