திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்கு வயிற்று எரிச்சல் : அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 9:14 pm

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறை,பள்ளி கல்வி துறை தோட்டக்கலைத்துறை, சமூக நலம், கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர், மின்சாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை, உள்ளிட்ட 980 பேருக்கு 1116.97 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,நாடுளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்,மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஈரான்டு சாதனை மலரை வெளியிட்டனர். முன்னதாக அனைத்து துறை சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்ததை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி.
இரண்டு ஆண்டு காலத்தில் இந்த வார்டில் மட்டும் 3அரை கோடி திட்டம் கொடுத்து உள்ளது. இதே போல் கோவை மாநகரப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் 11 கோடியே 73 லட்சம் நல திட்டம் வழங்க உள்ளோம்.திராவிட மாடல் ஆட்சி சிலருக்கு சந்தேகம் வருகிறது. ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சல் வருகிறது.பெண்கள் காலை உணவு செய்து பணிக்கு போக வேண்டும்/ இதனால் காலை உணவு திட்டம் முதல்வர் வழங்கி உள்ளார்.

1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளோம்.ஐடி நிறுவனம் பெங்களூருக்கு சென்று விட கூடாது என கோவைக்கு 9000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.200 ஏக்கர் நிலப்பரப்பில் டெக்சிட்டி வர உள்ளது.

செம்மொழி பூங்கா வர உள்ளது. இரண்டு ஆண்டு சாதனையை
தலைப்பு செய்திகளாக சொல்ல வேண்டும், அதில் மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் என உள்ளிட்ட பல்வேறு திட்டம் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக துவங்கப்பட்டுள்ளது என்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 438

    0

    0