பல வருடங்களாகவே நட்சத்திர ஜோடியான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலர்களாகவே சுற்றி வருகின்றனர். திருமணம் எப்போது என்ற கேள்விக்கு எந்த பதிலும் வராத நிலையல், அண்மையில் கோவில் கோவிலாக சுற்றி வரும் இவர்கள் ஏற்கனவே திருமணம் செய்த தம்பதிகள் போல வெளியுலகுக்கு காட்டி வருகின்றனர்.
குறிப்பாக நெற்றி வகிடில் குங்குமம் வைத்தது சர்ச்சையானது. ஆனால் எந்த விமர்சனத்துக்கும், சர்ச்சை குறித்து எந்த பதிலளிக்காமல் தான் தங்கள் வேலையுண்டு என இருந்து வருகின்றனர்.
லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் ஒரு விஷயத்தை கூறி புலம்பியுள்ளார். அதாவது, தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களுக்கு சவுதி அரேபிய கோல்டன் விசா வழங்கி வருகிறது.
குறிப்பாக இந்த விசா இருப்பவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனால் பிரபலங்கள் பலர் கோல்டன் விசா வாங்க முயற்சி எடுத்து வருகின்றனர்.சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, முதலீட்டாளர்கள், அறிவியல் அறிஞர்கள் போன்ற அனைவருக்கும் இந்த கோல்டன் கொடுக்கப்படுகிறது.
ஷாருக்கான், மோகன்லால், மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால், பின்னணி பாடகி சித்ரா போன்றோருக்கு கோல்டன் விசா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், தனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என விக்னேஷிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார் நயன்தாரா. இதற்காக நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தற்போது வரை அவருக்கு இந்த விசா கிடைக்கவில்லை.
நயன்தாராவுக்கு கோல்டன் விசா கிடைக்காததற்கு காரணமாக பார்க்கப்படுவது மத ரீதியான பிரச்சினைதான். நயன்தாரா கிறிஸ்டின் மதத்தை சேர்ந்தவர். ஆனால் தற்போது தன் காதலனுடன் இந்து கோயிலுக்கு சென்று வருகிறார். அதனால் இவர் எந்த மதம் என்பது உறுதியாக தெரியாததால் இவருக்கு கோல்டன் விசா கிடைக்கவில்லை.
மேலும் சின்ன சின்ன பிரபலங்களுக்கு கூட கோல்டன் விசா மிகவும் சுலபமாக கிடைக்கிறது. ஆனால் நயன்தாராவால் எல்லாவற்றையும் வாங்கும் அளவிற்கு வசதி இருந்தாலும் கோல்டன் விசா கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் உள்ளாராம்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.