துணிக்கடையில் அட்டகாசம்… பணத்திற்கு பதிலாக கத்தியை காட்டிய ரவுடி கும்பல் .. ஊழியரை கொலை செய்ய முயன்றதால பரபரப்பு

Author: Babu Lakshmanan
4 March 2024, 1:26 pm

துணிக்கடையில் அட்டகாசம்… பணத்திற்கு பதிலாக கத்தியை காட்டிய ரவுடி கும்பல் .. ஊழியரை கொலை செய்ய முயன்றதால பரபரப்பு

பொன்னேரியில் ரவுடி கும்பல் அட்டகாசம் கத்தியுடன் துணிக்கடை மற்றும் மருந்தகத்தில் புகுந்து ஊழியர்களை வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேன்பாக்கம் பகுதியில் முதல் தளத்தில் செயல்படும் புதிய ஆடை விற்பனை கடை ஒன்றில் புகுந்த ரவுடி கும்பல் புதிய ஆடையை வாங்கிவிட்டு அதற்குரிய பணத்தை தராமல் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அதில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அவர்களை உள்ளே வைத்து கேட்டினை பூட்டிவிட்டு கீழே இருந்த மருந்தகத்தில் சென்று புகுந்து கொண்டார். உடனடியாக, அங்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் கத்தியுடன் அவரை சரமாரியாக தாக்க முயன்றனர். மேலும், பொதுமக்கள் அதிகளவில் அங்கு இருப்பதை கண்ட ரவுடி கும்பல் துணிக்கடையில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியது.

இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் பொன்னேரி போலீசார் அங்கு வருவதற்குள் கத்தியுடன் சுற்றிய ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இது குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு கத்தியை காட்டி அச்சுறுத்தும் வகையில், செயல்பட்டு தப்பியோடிய ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்..

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!