கட்டுக்கடங்காத கூட்டத்தால் திக்குமுக்காடிய ஆழியாறு : கடும் போக்குவரத்து நெரிசல்… பணியில் இல்லாத போலீஸ்..கேள்விக்குறியான பாதுகாப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 5:34 pm

கோவை : பொள்ளாச்சி ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஆழியார் அணை பிரபலமானதாகும். இந்த அணையில் தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்கள் படங்கள் எடுத்து தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய அணையாகும்.

தற்போது பள்ளி விடுமுறை உள்ளதால் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆழியார் அணையை கண்டுகளித்து வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையில் குவிந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்படாது வண்ணத்தில் காவல்துறையினர் சில நாட்களுக்கு பணியில் முன்பு ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது போலீசார் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!