சென்னையில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக போதை கலாச்சாரத்திற்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
கடந்த 18ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் பைனான்சியர் ஆறுமுகம் என்பவர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் அடுத்து ஒரு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை அரிநாராயணபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ராகுல். 19 வயது வாலிபரான இவர் கூலி வேலை செய்து வந்தார்.இவரது தந்தை ராம்குமார் உயிரிழந்துவிட்ட நிலையில் தாய் பானுவுடன் ராகுல் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இரவு அரிநாராயணபுரம் பகுதியில் ராகுலை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் தலை, முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ராகுல் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
ராகுலை வெட்டிய கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதைப்பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிய ராகுலை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது போதை மாத்திரை விற்பனை தகாராறில் ராகுல் கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
ராகுல் கூலி வேலை செய்து கொண்டே இளம் வயதிலேயே போதை மாத்திரைகளையும் வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த போதை மாத்திரைகளை வாங்குவதற்காக கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 25), தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 20), பென்சில் பேக்டரியை சேர்ந்த ரகுமான் (வயது 20) ஆகிய 3 பேரும் ராகுலிடம் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ராகுல் பணம் வாங்கிக்கொண்டு போதை மாத்திரைகளை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ராகுலுக்கும், பணம் கொடுத்து ஏமாந்த 3 பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இதையடுத்து ரூ.20 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு போதை மாத்திரைகளை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிய ராகுலை கொலை செய்ய சங்கர், சரவணன், ரகுமான் ஆகியோர் திட்டம் தீட்டினர்.
நேற்று இரவு கொருக்குப்பேட்டை நாராயணபுரம் பகுதியில் வைத்து இதுதொடர்பாக ராகுலுக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தப்பி ஓடி தலைமறைவான சங்கர், சரவணன், ரகுமான் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ராகுல் கொலை தொடர்பாக வாக்குமூலமும் அளித்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலையுண்ட ராகுலின் தாய் கூறும்போது, என் மகன் போதை மாத்திரை எதையும் விற்பனை செய்யவில்லை என்றும், யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் கூறி இருகிறார்.
மேலும் ராகுல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.