மனைவி மகளை கடத்திவிட்டதாக கூறி மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமி : போராடி மீட்ட தீயணைப்புத்துறை.. போலீசாருக்கே டிமிக்கி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 9:42 pm

வேலூர் : கடத்தி வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை மீட்டுத்தரக்கோரி
காவல் நிலையத்தில் உள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

வேலூர் மாநகர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தண்டபாணி. இன்று மாலை வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்க்கு வந்த அவர் திடீரென அங்குள்ள மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வதாக போலிசாரை மிரட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் தான் சண்டை போட்டதாகவும் இதனால் எனது மனைவி மகளை அவர்கள் கடத்தி வைத்துள்ளதாகவும் அவர்களை மீட்பு தரக்கோரி புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக அவர்களை மீட்டுத்தரக்கோரி இன்று மரத்தின் மீது ஏரி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையத்து தண்டபாணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் வேலூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மரத்தில் இருந்த தண்டபாணியை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில் “தண்டபாணி மதுபோதையில் இருந்ததாகவும், இவர் அடிக்கடி குடித்து வந்து மனைவி மகளை தொல்லை செய்துள்ளார். இதனால் தண்டபாணி மனைவி அவருடைய அம்மா வீட்டிற்கு தண்டபாணியை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். ஆனால் தண்டபாணியோ உறவினர்கள் மனைவியை கடத்தி விட்டதாக போதையில் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் என கூறினர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.
காவல் நிலையத்தில் உள்ள மரத்தில் ஒரு நபர் திடீரென ஏறி தற்கொலை மிரட்டல் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறிது நேரம் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த அந்த நபர் போதை தெளிந்ததும் வெளியில் அமர்வதாக கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவீட்டுள்ளார்.

  • Kottachi Talked About Vadivelu and vivek வடிவேலு சம்பளத்தை பிடுங்கிக்குவாரு.. ரொம்ப மோசமானவர் : பிரபலம் பளீச்!!
  • Views: - 847

    0

    0