நாயை தலைகீழாக பைக்கில் தூக்கி சென்ற போதை ஆசாமிகள் : வைரலான வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை… ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 9:55 pm

பழனி : குதியில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியை காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியான காந்தி மார்க்கெட் சாலையில் இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் நாய்க்குட்டி ஒன்றை பின்னங்காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் பிடித்துக் கொண்டு வளைந்து வளைந்து சாலையில் சென்றது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகளை வைத்து சம்மந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்பினரிடம பொதுமக்கள் புகார் அளித்தனர்.

https://vimeo.com/726101489

இதைத்தொடாந்து நாயை துன்புறுத்திய மகுடீஸ்வரன், அரவிந்த்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது-

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 842

    0

    0