மாணவிகளை ‘டீஸ்’ செய்த போதை மாணவன் : தட்டிக் கேட்ட பள்ளி தலைமையாசிரியரின் மண்டையை உடைத்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 12:56 pm

விழுப்புரம் : குடிபோதையில் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 17). இவன் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறன்.

கடந்த சில தினங்களாகவே பள்ளிக்கு வரும் மாணவிகளை கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளான். இந்நிலையில்,அப்பள்ளியின் தலைமையாசிரியர் சேவியர் சந்திரசேகர் மாணவனை அழைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்த நாளன்று குடிபோதையில் பள்ளிக்கு வந்த விக்னேஷ் தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அவரை தலையில் தாக்கி காயப்படுத்தி உள்ளான்.

படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்த கண்டமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் பள்ளி மாணவன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளான்.

ஏற்கனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளி மாணவன் போதையில் தலைமையாசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu