ஒரு மூட்டையல்ல ரெண்டு மூட்டையல்ல 150 மூட்டைகளில் போதைப் பொருள் : கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த 2 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 1:38 pm

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரண்டு வேன்களில் கடத்திவரப்பட்ட 150 முட்டைகள் கொண்ட சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக சத்தியமங்கலம் காவல்துறை ஆய்வாளர் நெப்போலியனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை சத்தியமங்கலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பண்ணாரி காவல் துறையினர் சோதனை சாவடியில் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த இரண்டு பிக்கப் வேன்களை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்த போது , வேனில் ஏற்றிவரப்பட்ட காலிபிளவர் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே இருந்த 150 மூட்டைகளிலும் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

பிடிபட்ட இரண்டு பிக்கப் வேனின் ஓட்டுநரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது வேனை ஓட்டி வந்த இரண்டு நபர்களும் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த பிரசன்னா மற்றும் சுதாகர் என்பதும் இவர்கள் இருவரும் மைசூரில் இருந்து 2 பிக்கப் வேன்களில் 150 மூட்டைகளில் ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவை செல்ல இருப்பதும் தெரிய வந்தது.

இதைனையடுத்து வேன் ஓட்டுனர் பிரசன்னா மற்றும் சுதாகர் ஆகிய இருவரையும் கைது செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர் அவர்கள் கடத்தி வந்த ஹான்ஸ், பான்பராக், மாணிக்சந்த், சுவாகத் போன்ற போதைப்பொருள்கள் கொண்ட 150 மூட்டைகளை கைப்பற்றி சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர்.

பின்னர் வேனை ஓட்டி வந்த பிரசன்னா மற்றும் சுதாகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்கள் உரிமையாளர் யார் என்பது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…