போலீசாரை தாக்க முயன்ற டிரம்ஸ் வாசிப்பாளர் : திருப்பூர் அருகே போக்குவரத்தை சரி செய்த போது வாக்குவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 10:57 am

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு நிகழ்ச்சியில் போலீசாரை டிரம்ஸ் வாசிப்பாளர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குண்டடம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள கொடுவாயில் அவருக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அவர் சென்ற பின்னர் அவிநாசி பாளையம் போலீசார் கூட்டத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். அப்போது டிரம்ஸ் மேள வாசிப்பாளரான அருள் என்பவர் காவல் ஆய்வாளர் கணேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றார்.

இதனையடுத்து அவரை பிடித்த போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். எதிர்கட்சித் தலைவர் வரவேற்பு நிகழ்ச்சியில் போலீசாரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!