விட முடியாத குடிப்பழக்கம்… லீவு எடுத்து சொந்த ஊருக்கு சென்ற காவலரின் விபரீத முடிவு ; சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

Author: Babu Lakshmanan
17 October 2023, 9:34 am

திருப்பூரில் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்தவர் நிலக்கோட்டையில் தனது சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் அழகுராஜ் (வயது 33). இவர் திருப்பூர் மாநகரம் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்ததாகவும், இவருக்கு பிரியா (30) என்ற மனைவியும், சாய்சித்தார்த் (8), தட்க்ஷபிரகலாத் (7) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

அழகுராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்ததாகவும், அழகுராஜுக்கு கடந்த ஒரு வருட காலமாக குடிப்பழக்கம் அதிகமாக இருந்து வந்ததால் அவரை திருப்பூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலமாக திருப்பூர் டி.கே.டி மில் அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இதனைத் தொடர்ந்து, பின்னர் பணிக்கு வந்தவர்.கடந்த 12.10.23 தேதி விடுமுறையில் தனது சொந்த ஊரான நிலக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அழகுராஜின் மனைவி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்து கடந்த 5 மாதமாக அவரது பெற்றோர் வீட்டில் தனது குழந்தைகளுடன் பழனியில் இருந்ததாகவும், மனைவியை பார்த்து விட்டு, நிலக்கோட்டை வீட்டிற்கு வந்த அழகுராஜ் சம்பவ நாளான வெள்ளையம்மாள் ரேஷன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூஜையறையில் மட்டை கம்பில் காவி நிற வேஷ்டி துணியில் தூக்கிட்டு தற்கொலை செய்து தொங்கியுள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இறக்கி பார்த்தபோது, அழகுராஜின் கையில் இரண்டு காகிதங்களில் தனது இறப்பிற்கு குடிப்பழக்கம் தான் காரணம் என்றும், வேறு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இறந்த அழகு ராஜின் தாய் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் வெங்கட்ராஜிடம் தனது மகனின் இறப்பில் சந்தேகமில்லை என்று கூறியதால் தற்கொலை என பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலக்கோட்டை பகுதியில் ஒரு போலீசார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 460

    0

    1