மதுபோதையில் ஓட்டலை சூறையாடிய கும்பல் : சாப்பிட வந்த 5 பேர் வெறிச்செயல்.. அதிர்ச்சி வீடியோ!
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.நேற்று அவர் ஓட்டலில் வியாபாரத்தை கவனித்து கொண்டு இருந்தார்.
அப்போது உணவருந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர்.
அதில் ஒருவர் பாதையை மறைத்தவாறு உட்கார்ந்து உள்ளார்.அவரை ஓரமாக உட்கார சொன்ன போது ராமசாமிக்கும் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி ராமசாமி மற்றும் அவரது தந்தையை தாக்கினர்.
மேலும் ஓட்டலில் இருந்த டேபிள் பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். பின்னர் அவர்களை மிரட்டி விட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு.. கொந்தளித்த மனித உரிமை ஆர்வலர்கள் : நீதிமன்றத்தில் முறையீடு!!
இந்த தாக்குதலில் காயமடைந்த ராமசாமியை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டலை சூறையாடிய 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் தனக்கென தனி சீடர் கூட்டத்தை உருவாக்கி ஒரு ஆசிரமத்தை எழுப்பினார். ஆன்மீக சொற்பொழிவாற்றி…
யூட்யூப் பிரபலம் Food Vlogger இர்ஃபானை தெரியாத நபர்களே இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு இணையவாசிகளின் மத்தியில் மிகப் பிரபலமான யூட்யூபராக வலம்…
குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றி அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வுக்கு…
தங்கம் என்ற சொல்லை உதட்டளவு இனி உச்சரிக்கத்தான் முடியும் என்பது போல தினமும் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை…
This website uses cookies.