திமுக கட்சிக்கொடியிடம் தோப்பு கர்ணம் போட்டு மன்னிப்பு கேட்கும் போதை ஆசாமி : வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 December 2022, 11:22 am

திமுக கட்சி கொடியிடம் மன்னிப்பு கேட்டு ஆசிர்வாதம் பெறும் குடிமகனின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினையொட்டி கரூர் பேருந்து நிலையம் முதல் பைபாஸ் ரவுண்டானா வரை பல்வேறு பகுதிகளில் திமுக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், குடிமகன் ஒருவர் சுமார் 50 வயதிற்கும் மேற்பட்ட நபர், ஒருவர் மதிய வேலையில், கொளுத்தும் வெயிலில், திமுக கட்சி கொடியினை கும்பிட்டு பின்னர், தரையில் விழுந்து சுவாமியிடம் தரிசனம் செய்யும் காட்சி தற்போது கரூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது.

இது பாவ மன்னிப்பு கேட்கின்றாரா ? அல்லது கோயில் என்று நினைத்து கும்பிடுகின்றாரா ? என்றும் கேள்விக்குறியான நிலையில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் மிகுந்த அளவில் வைரலாகி வருகின்றது

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!